Local

E Bill மூலம் நீர் கட்டணம் வழங்க தீர்மானம்!

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து, நாடளாவிய ரீதியில் உள்ள பாவனையாளர்களுக்கு குறுந்தகவல் மற்றும் ஈ பட்டியல் மூலம் மாத்திரம் நீர் கட்டணப் பட்டியல் வழங்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நீர் பட்டியல் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து திருகோணமலை, கொழும்பு தெற்கு, கண்டி தெற்கு மற்றும் பொலன்னறுவை ஆகிய நான்கு பிரதேசங்களுக்கு குறுந்தகவல் அல்லது ஈ – பட்டியல் மூலம் நீர் பட்டியலை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து, நாடளாவிய ரீதியாக இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நீர் பட்டியல் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading