Local

வடக்குக்கான பொருளாதாரக் கட்டமைப்பு ஆய்வு நூல் வெளியீடு!

யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வடக்குக்கான பொருளாதாரக் கட்டமைப்பு ஆய்வு நூல் கொழும்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிதி அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வரவு – செலவுத் திட்டத்துக்கான முன்மொழிவு தொடர்பான கலந்துரையாடல் என்று கருதியே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். எனினும், அது தொடர்பில் ஆராயப்படவில்லை.

அடுத்த பத்து ஆண்டுக்களுக்கான வடக்கு மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான ஆய்வு நூலே வெளியிடப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “10 ஆண்டுகால திட்டங்கள் அவசியம்தான். ஆனால், உடனடியாக குறுகிய கால அபிவிருத்தி தொடர்பில் ஆராயவேண்டும். அது முன்னுரிமை அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறியமுடிகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading