Local

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து நாளை முடிவு!

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக நாளைய தினம் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் இன்று தெரிவித்தார்.

அரசாங்க பாடசாலைகள் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட இருந்தன.

நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களை அடுத்து பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறைத் தினமாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகள் மீண்டும் எப்பொழுதும் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சரிடம் இன்று கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்ததுடன் நாளைய தினம் நிலைமைகளை கவனத்தில் கொண்டு பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading