Local

‘போலி முகங்கள்’: 10 மாதங்களுக்குள் 2,200 முறைப்பாடுகள்

முகநூல் உட்பட சமூக வலைதளங்கள் தொடர்பில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


வேறொரு நபரின் புகைப்படத்தின் ஊடாக பயன்படுத்தப்படும் போலி கணக்குகள் குறித்தே அதிக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஸ்ட தகவல் தொழில்நுட்ப பொறியிலாளர் ரொஷான் சந்தரகுப்த கூறினார்.

எனவே, சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படும் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின், இணையக்குற்றங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading