Local

மீன்பிடித்தோர் மின்னல் தாக்குதலுக்கு இலக்கு! – ஒருவர் பலி; மற்றொருவர் கவலைக்கிடம்

மெதிரிகிரிய, கவுடுல்ல குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நால்வர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஹிங்குரான்கொட பகுதியை சேர்ந்த 25 வயதுடைய நுவன் குமார என்பவரே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் மின்னல் தாக்கியதில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மெதிரிகிரிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மெதிரிகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading