LocalNorth

யாழ். நாவாந்துறையில் சுற்றிவளைப்புத் தேடுதல்! – நால்வர் கைது

யாழ். நாவாந்துறையில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதி பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நால்வர் கைதுசெய்யப்பட்டனர்.

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து தொடர்ச்சியான சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக இன்று அதிகாலை 4.30 மணியிலிருந்து நாவாந்துறை, ஐந்துசந்திப் பகுதிகளில் இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்டனர்.

இந்தப் பகுதிக்குள் செல்வதும், அங்கிருந்து வெளியே செல்வதும் தடைசெய்யப்பட்டிருந்தது. வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் சல்லடை போட்டுத் தேடப்பட்டது. இதன்போது நால்வர் கைதுசெய்யப்பட்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading