Local

இராணுவத்தினரே ஜனநாயகத்தின் காவல் தெய்வம்! – வெல்கமவுக்கு கோட்டா பதிலடி

இராணுவத்தினர்தான் ஜனநாயகத்தின் காவல் தெய்வங்கள் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.


இராணுவ அதிகாரி அல்லாத ஜனநாயக வழியில் பயணிக்கும் அரசியல்வாதியொருவரே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவேண்டும் என குமார வெல்கம எம்.பியால் தெரிவிக்கப்பட்டுவரும் கருத்து குறித்த வினவியபோதே கோட்டாபய இவ்வாறு கூறினார்.


“ ஜனநாயகம் என வரும்போது அதை காக்கும் காவல் தெய்வமாகவே இராணுவத்தினர் இருக்கின்றனர். எனவே, ஜனநாயகம் என்றால் என்னவென்பது இராணுவத்தினருக்கு நன்றாகவே தெரியும்.

நாம் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக போர்தொடுக்கவில்லை. அவர்களைப் பாதுகாப்பதற்காகவே யுத்தம் செய்தோம்.

அமெரிக்க குடியுரிமையை துறக்கவேண்டிய தேவைஎழும்போது அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கோட்டாபய குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading