Lead NewsLocal

ஜனாதிபதித் தேர்தலில் 2 ஆவது முறை போட்டியிடமாட்டார் மைத்திரி! – கோட்டாவைக் களமிறக்க பச்சைக்கொடி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், இரண்டாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்ற அறிவிப்பை ஜனாதிபதி விடுத்தார்.எனினும், காலப்போக்கில் அந்நிலைப்பாட்டை மாற்றி – நாட்டுக்காக இரண்டாவது தடவையும் களமிறங்குவேன் என குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அரசியல் குழப்பத்தோடு மைத்திரியின் செல்வாக்கு சரிந்துவிட்டதால், பதவிக்காலம் முடிந்ததும் அரசியலுக்கு விடுப்புகொடுக்க மைத்திரி தீர்மானித்துள்ளார்.

அத்துடன்,  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய ன இணைந்து  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  கோட்டாப ராஜபக்சவை களமிறக்குவதற்கு மைத்திரியும் பச்சைக்கொடி காட்டுவார் என கூறப்படுகின்றது.

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நபரொருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமுடியாது. எனவே, மஹிந்தவுக்கு பதிலாக கோட்டாவையே களமிறக்க பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading