Local

பொன்சேகாவுக்கு மைத்திரி ‘வெட்டு’!

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 29 அமைச்சர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர்.

சுதந்திரக்கட்சிலிருந்து, ஐக்கிய தேசியக்கட்சி அரசுக்கு ஆதரவளிப்பதற்காக கட்சிதாவிய உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சப் பதவி வழங்கப்படவில்லை. ஜனாதிபதியே இதை தடுத்து நிறுத்தியுள்ளார்.

அதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகாவுக்கும் அமைச்சுப்பதவி வழங்கப்படவில்லை. தேசிய அரசின்போது இவர் வகித்த வனஜீவராசிகள் அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அரசியல்  நெருக்கடியின்போது ஜனாதிபதியை ,  சரத்பொன்சேகா  கடுமையாக  விமர்சித்திருந்தார். ஒருகட்டத்தில்  மனநோயாளி என்றுகூட விளாசித்தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading