Lead NewsLocal

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மைத்திரி தொலைபேசியில் வாழ்த்து!

 

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (24) பிற்பகல் தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் மிக நெருங்கிச் செயற்படுபவர் என்ற வகையில் அவரது இந்த வரலாற்று முக்கியத்துவமுடைய வெற்றி தொடர்பில் தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும், அவரது எதிர்வரும் ஆட்சிக் காலப்பகுதியில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் எனத் தான் நம்புவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

தொலைபேசி ஊடாக குறுகிய உரையாடலொன்றை மேற்கொண்ட இரு நாட்டு அரச தலைவர்களும் சகோதர அரசுகள் என்ற வகையில் சமாதானம், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்திக்காக ஒத்துழைப்புடன் செயற்பட உறுதிபூண்டனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading