HELLO18 அறிமுக நிகழ்வின் மூலம் iPhone அனுபவங்களின் புதிய அத்தியாயத்தை iDealz ஆரம்பித்து வைத்துள்ளது
iDealz Lanka (Pvt) Ltd நிறுவனம், தனது தொழில்நுட்ப சில்லறை வணிகப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, iPhone 18 தயாரிப்பு வரிசையின் வருகையைக் கொண்டாடும் வகையில் HELLO18 எனும் பிரத்தியேக அறிமுக நிகழ்வை நடத்தியது. 2026 ஒக்டோபர் 23 அன்று கொழும்பிலுள்ள கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், தொழில்நுட்ப ஆர்வலர்கள், வாடிக்கையாளர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இது, அதிநவீன ஐபோன் தொழில்நுட்பத்தை ஒரு முழுமையான அனுபவமாகப் பங்கேற்பாளர்களுக்கு வழங்கியது.
வழக்கமான தயாரிப்பு அறிமுக நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டு, நுகர்வோர் தொழில்நுட்பத்துடன் நேரடியாகவும் அர்த்தமுள்ள வகையிலும் தொடர்புகொள்ளும் வகையில் HELLO18 நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேடையில் தயாரிப்பை அறிமுகப்படுத்துதல், அதன் பெட்டியைத் திறந்து உள்ளேயுள்ள சாதனைக் காண்பித்தல் மற்றும் இடைச்செயற்பாடுகள் அடங்கிய அனுபவங்கள் எனப் பல அம்சங்களை உள்ளடக்கிய இந்நிகழ்வு, விருந்தினர்கள் ஐபோன் 18 தயாரிப்பு வரிசையைப் பற்றி அறிந்துகொள்ளவும், iDealz அணியுடன் நேரடியாக உரையாடவும் ஒரு சிறந்த சூழலை உருவாக்கியது.
இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக, ஐபோன் 18 தயாரிப்பு வரிசை பிரத்தியேக விளக்கக்காட்சி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது புதிய சாதனங்களைச் சுற்றியுள்ள உற்சாகமூட்டும் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. மேலும், பங்கேற்பாளர்கள் சாதனங்களை நேரில் கையில் எடுத்துப் பார்க்கவும், அவற்றை நெருக்கமாக ஆய்வு செய்யவும், நேரடி அனுபவத்தின் மூலம் தயாரிப்புகளைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் கூடிய பிரத்தியேக ஏற்பாட்டு இடமும் அங்கு அமைக்கப்பட்டிருந்தது.
இந்த அறிமுகம், தொழில்நுட்ப சில்லறை வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள ஒரு பரந்த மாற்றத்தையும் பிரதிபலித்தது. இதில், வாடிக்கையாளர் பயணம் என்பது, பொருட்கள் கிடைப்பதை மட்டும் தாண்டி, புதியவற்றைக் கண்டறிதல், வாடிக்கையாளர்களுடன் ஈடுபடுதல் மற்றும் தகவலறிந்த கொள்வனவு முடிவுகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக விரிவடைந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் சாதனங்களை நேரடியாக அனுபவிப்பதற்காக ஒரு பிரத்தியேக தளத்தை உருவாக்குவதன் மூலம், தொழில்நுட்பத்தை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதிலும், வர்த்தகநாமத்திற்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதிலும் தனது முக்கியத்துவத்தை iDealz நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.
iDealz Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் ஸ்தாபகர் மற்றும் தலைவர் மொஹமட் ரிஃப்கான் கூறுகையில், “மக்கள் தொழில்நுட்பத்தை தாங்களாகவே அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறும்போதுதான் அதைச் சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியும். HELLO18 மூலம், ஒரு புதிய வகை சாதனங்களை அறிமுகப்படுத்துவதையும் தாண்டி, வாடிக்கையாளர்களை அவர்கள் மதிக்கும் தொழில்நுட்பத்துடன் நெருக்கமாக்கும் ஒரு அனுபவத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கமாக இருந்தது. அறிவுபூர்வமான வழிகாட்டுதல் மற்றும் நேரடியாகப் பொருட்களைக் கண்டறிதல் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் அர்த்தமுள்ள வாடிக்கையாளர் ஈடுபாடு, நவீன சில்லறை வர்த்தக அனுபவத்தின் ஒரு இன்றியமையாத பகுதியாகும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
நுகர்வோர் நம்பிக்கையை வளர்ப்பதிலும், தொழில்நுட்ப வர்த்தகநாமங்களுக்கும் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கும் இடையே வலுவான தொடர்புகளை உருவாக்குவதிலும் அனுபவபூர்வமான அறிமுகங்களின் பங்கை HELLO18 நிகழ்வானது மேலும் அடிக்கோடிட்டுக் காட்டியது. தயாரிப்பு விளக்கக்காட்சி மற்றும் நேரடி ஈடுபாடு ஆகியவற்றின் இணைப்பின் மூலம், இந்த நிகழ்வு வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் 18 தயாரிப்பு வரிசையை இடைச்செயற்பாடுகள் நிறைந்த சூழலில் ஆராய்வதற்கான ஒரு தளத்தை வழங்கியது.
இலங்கையின் மொபைல் மற்றும் தொழில்நுட்ப சில்லறை விற்பனைத் துறையில் வலுவான இடத்தைப் பெற்றுள்ள iDealz, தனது காட்சியறைகள் மற்றும் டிஜிட்டல் மார்க்கங்கள் மூலம் நுகர்வோரை ஸ்மார்ட்போன்கள் மற்றும் அது தொடர்பான துணைச்சாதனங்களுடன் தொடர்ந்து இணைத்து வருகிறது. HELLO18 அறிமுக நிகழ்வானது, வாடிக்கையாளர் ஈடுபாட்டிற்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும், எளிதில் அணுகக்கூடிய, தகவல் நிறைந்த மற்றும் ஈர்க்கக்கூடிய தொழில்நுட்ப சில்லறை விற்பனை அனுபவங்களை வழங்குவதில் அதன் கவனத்தையும் பிரதிபலித்தது.



You must be logged in to post a comment.