ICC Champions கிண்ண கிரிக்கெட் அட்டவணை வெளியீடு!
ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான அட்டவணை நேற்று வெளியானது.
இதற்கமைய, இந்தியா மோதும் போட்டிகள் துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. எதிர்வரும் 2025, பெப். 19 முதல் மார்ச் 9 வரை இப்போட்டிகள் நடக்கின்றன. இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், பங்களாதேஷ், நியூசிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மோதும் முதல் போட்டி, பெப்ரவரி. 20ம் திகதி துபாயில் பங்களாதேஷுடன் நடக்கிறது. அடுத்த 2 போட்டிகள், பெப். 23ம் திகதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2ம் திகதி நியூசிலாந்துடனும் துபாயில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா அல்லாத பிற அணிகள் மோதும் போட்டிகள் பாகிஸ்தானில் 3 நகரங்களில் நடக்க உள்ளன. இதற்கு முன், 2023ல் ஆமதாபாத்தில் நடந்த உலக கிண்ண ஒரு நாள் போட்டித் தொடரில் பாக்.கை எதிர்த்து ஆடியுள்ள இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின், 2024ல் நியூயோர்க்கில் நடந்த ஐசிசி டி20 போட்டியில் பாக்., 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.

You must be logged in to post a comment.