Local

விடைபெறும் ஐ.ஜி.விக்கு கொரியாவில் தூதுவர் பதவி?

பொலிஸ்மா அதிபர் பதவியை இவ்வாரம் இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படும் பூஜித் ஜயசுதந்தரவுக்கு, தூதுவர் பதவி வழங்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.


தென்கொரியாவுக்கான இலங்கைத் தூதுவராக அவர் நியமிக்கப்படவுள்ளார் என்றும், பதவி துறந்த கையோடு புதிய பதவியேற்று நாட்டைவிட்டு வெளியேறுவார் என்றும் தெரியவருகின்றது.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர பதவி துறக்கவேண்டும் என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதன்படி இவ்வாரம் அவர் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை வெளிவிவகார சேவைக்கு 70 வீதம் தகைமை அடிப்படையிலும் 30 வீதம் அரசியல் நியமனங்களும் வழங்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ஆட்சியின்போது பொலிஸ்மா அதிபராக இருந்த மஹிந்த பாலசூரியவுக்கு, பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவர் பதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading