Local

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணை குறித்து பேராயர் சந்தேகம்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளினால், தாக்குதலுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் உரிய முறையில் தகவல்கள் வெளிப்படுத்தப்படுமா? என்ற சந்தேகம் எழுகின்றது எனப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அக்மீமனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“இந்தத் தாக்குதல் பல ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தின் பிரதிபலனாகும். இது இலங்கையில் திட்டமிடப்பட்ட செயற்பாடா? அல்லது வெளிநாட்டில் திட்டமிடப்பட்டதா? என்பது தொடர்பில் விசாரணைகள் முடியும்வரை தெரிவிக்க முடியாது” எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading