Local

கூட்டரசிலிருந்து சு.கவை பிரிக்க வியூகம் – பீரிஸின் வீட்டில் நாளை முகாமிடுகிறது மஹிந்த அணி!

கூட்டுஎதிரணி எம்.பிக்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நாளை ( 09) கொழும்பில் நடைபெறவுள்ளது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் கட்டாயம் பங்கேற்குமாறு எம்.பிக்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


கூட்டரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவுடன் இடைக்கால அரசு அமைப்பது குறித்து இதன்போது பேசப்படவுள்ளது என்றும், அரசியலமைப்பு ரீதியில் அதற்கு உள்ள தடங்கள் நிலைகள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்படும் என்றும் தெரியவருகின்றது.

“இடைக்கால அரசு அமைக்கும் யோசனை கூட்டத்தில் முன்வைக்கப்படும்” என்று கூட்டுஎதிரணியின் இரத்தினபுரி மாவட்ட எம்.பியான ரஞ்சித டி சொய்சா புதுச்சுடர் இணையத்துக்கு தெரிவித்தார்.

அதேவேளை, இடைக்கால அரசு அமைப்பதற்கு இலங்கை அரசியலமைப்பில் ஏற்பாடு இல்லை என்றும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே அத்தகையதொரு அரசை அமைக்க முடியும் என்றும் சட்டநிபுணர் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading