Local

நாடுகடத்தப்பட்டார் கஞ்சிப்பான இம்ரான் – பலகோணங்களில் சி.ஐ.டி. விசாரணை!

டுபாயில் கைதுசெய்யப்பட்ட  போதைப்பொருள் கடத்தல்காரரான   ‘கஞ்சிப்பானை இம்ரான்’ என அழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரானிடம் சி.ஐ.டி.யினர் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

டுபாயிலிருந்து இன்று நாடு கடத்தப்பட்ட அவர் இன்று ( 28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கிலிருந்து மாலைதீவுக்கு தப்பிச்செல்ல முயற்சிக்கின்றார் என கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பின்னர் கட்டுநாயக்க விமானநிலையத்திலிலுள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கஞ்சிப்பானை இம்ரானை பொறுப்பேற்றனர். அவரை தடுத்து வைத்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் கஞ்சிப்பான இம்ரானும், அவரது சகாக்களும் தொடர்புபட்டுள்ளனர் என விசாரணைகள்மூலம் அண்மையில் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சிபான இம்ரானின் சகாக்கள் கைதுசெய்யப்பட்டனர்.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading