Sports

வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது சென்னை! 5000 ஓட்டங்களை குவித்தார் ரெய்னா!

ஐ.பி.எல் தொடர்களில் 5 ஆயிரம் ஓட்டங்கள்  குவித்த முதல் வீரர் எனும் சாதனையை படைத்தார் சுரேஷ் ரெய்னா.

12ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் – ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ( 23)  நடைபெற்றது.

நாணய சுழற்சியில்  வென்ற சிஎஸ்கே அணியின் தலைவர், மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

அதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி, சிஎஸ்கேவின் சிறப்பான பந்துவீச்சினால் 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

பதிலெடுத்தாடிய சி.எஸ்.கே. அணி,  17.4வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்கள் எடுத்து வென்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாடி 19(21) ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் ஐ.பி.எல் தொடரில் 5000 ரன்கள் குவித்த முதல் வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார் ரெய்னா.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading