World

ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிரடி! எகிப்தில் 8 பொலிஸார் சாவு!!

எகிப்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பொலிஸார் பலியாகினர்.

எகிப்து நாட்டில் மத்திய பெருங்கடல் மற்றும் செங்கட லுக்கு அருகே சீனாய் தீபகற்பப் பகுதி அமைந்துள்ளது. அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் தீவிரவாதிகள் சீனாய் தீபகற்பத்தில் உள்ள நகரங்களைக் குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

அங்குள்ள அரிஷ் நகரில் இருக்கும் பொலிஸ் சோதனைச் சாவடி மீது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் திடீர்த் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும், கைக்குண்டுகளை வீசியும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்தத் தாக்குதலில் இரண்டு அதிகாரிகள் உட்பட 8 பொலிஸார் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், பலர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading