EastLead NewsLocal

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்கொலை அங்கி, ஆடைகள், கொடி, வெடிபொருட்கள் சம்மாந்துறையில் மீட்பு!

சம்மாந்துறைப் பிரதேசத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் இன்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட ​சோதனை நடவடிக்கையின்போது தற்கொலை அங்கி உள்ளிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்குச் சொந்தமான ஆடைகள், கொடி மற்றும் வெடிபொருட்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேரக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் பலத்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மீட்கப்பட்ட கொடியில் ஐ.எஸ்.ஐ.எஸ். என்று எழுதப்பட்டுள்ளது.

அதேவேளை, 150 ஜெலெட்க்னைட் குச்சிகள், சுமார் ஒரு இலட்சம் இரும்புக் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்களுடன் ட்ரோன் கமராவும் மீட்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading