Janashakthi Insurance Plcயின் தலைவராக Annika Senanayake நியமனம்!
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி, 2025 ஜனவரி 01 ஆம் திகதி முதல் தனது புதிய தலைவராக அனிகா சேனாநாயக்கவை நியமிப்பதாக அறிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு, பண்டகசாலை மற்றும் பொருள் இடப்பெயர்வு (warehousing and logistics), ஊடகம் மற்றும் ஒளிபரப்பு, ஆட்டோமொபைல், வான் பயணம் (aviation), பண்டகசாலை, உணவு மற்றும் பானங்கள் பதப்படுத்தல் மற்றும் பொதியிடல் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டுள்ள, IWS Holdingsஇல் 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பரந்த அனுபவத்தை கொண்டுள்ள அனிகா சிறந்த தலைமைத்துவத்தை ஜனசக்தி காப்புறுதிக்கு கொண்டு வருகிறார். பெருநிறுவன திட்டமிடல் மற்றும் மூலோபாய வளர்ச்சியில் அவர் கொண்டுள்ள பரந்த அளவிலான நிபுணத்துவம், நிறுவனத்தை அதன் அடுத்த கட்ட வளர்ச்சியில் வழிநடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் தலைமைத்துவக் குழுவிற்கு வலுவூட்டும் வகையில், தலைவராக தனது புதிய பதவியில் தொலைநோக்கு பார்வையினை கொண்டு வர அனிகா தயாராக உள்ளார். சிக்கலான, பன்முக வணிகங்களை நிர்வகிப்பதில் நிரூபிக்கப்பட்ட அவரது திறமை, இலங்கையின் போட்டித்தன்மை வாய்ந்த காப்புறுதி சந்தையில் தனது கால்தடத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் ஜனசக்திக்கு மூலோபாய வழிகாட்டல் மற்றும் ஆதரவை வழங்கும்.
அவர் தற்போது IWS Holdings (Private) Limited, RAD Productions (Private) Limited, RAD Productions USA LLC, Ceylon Natural Rubber (Pvt) Ltd, Scan Furniture (Private) Limited ஆகியவற்றில் இயக்குநராக பணியாற்றுவதுடன் மேலும் இலங்கை இயக்குநர்கள் நிறுவனத்தின் இளம் இயக்குநர் மன்றத்தின் குழு உறுப்பினராகவும் உள்ளார். அவரது பரந்த அனுபவப் பின்னணி 2020இல் ஓய்வு பெறும் வரை சம்பத் வங்கி பிஎல்சியில் சுயாதீனமான, நிர்வாகமற்ற இயக்குநர் மற்றும் ART Television Broadcasting Coவின் தலைமை நிர்வாக அதிகாரி போன்ற குறிப்பிடத்தக்க கடந்தகால பதவிகளை உள்ளடக்கும். பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனிகாவின் தலைமைத்துவ அனுபவம், ஜனசக்தி காப்புறுதியின் தொடர்ச்சியான வெற்றிக்கு மதிப்புமிக்க நுண்ணறிவு மற்றும் மூலோபாய வழிகாட்டுதலை வழங்க அவரை வழிநடத்தும்.
புதிய நியமனம் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் நிர்வாக துணைத் தலைவர் பிரகாஷ் ஷாஃப்டர், “ஜனசக்தி காப்புறுதி குடும்பத்திற்கு எமது புதிய தலைவர் அனிகா சேனாநாயக்கவை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரது பரந்துபட்ட தலைமைத்துவ அனுபவமும் பல தொழில் துறைகளில் வெளிப்படுத்திய திறமைகளும் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிப் பாதையில் நாம் பயணிக்கும் போது மதிப்புமிக்கதாக அமையும். அனிகாவின் மூலோபாய பார்வை மற்றும் வணிகங்கள் தொடர்பான ஆழமான புரிதல், சந்தையில் ஜனசக்தி காப்புறுதியின் நிலையை வலுப்படுத்துவதில் சந்தேகத்திற்கு இடமின்றி பங்களிக்கும். முழு ஜனசக்தி காப்புறுதி குடும்பத்தின் சார்பாக அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள்.” என்றார்.
ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் அனிகா சேனாநாயக்க கருத்து தெரிவிக்கையில், “மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு முக்கிய இடத்தைப் பெற்று காப்புறுதித் துறையில் தனது சிறந்த பாரம்பரியத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் நிறுவனமான ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் தலைவராகப் பொறுப்பேற்பதை நான் ஒரு பாக்கியமாக கருதுகிறேன். ஜனசக்தி காப்புறுதியின் மூலோபாய பயணத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் புதிய வெற்றி நிலைகளை அடைவதற்கும் அர்ப்பணிப்புள்ள குழுவுடன் இணைந்து பணியாற்றும் இவ் வாய்ப்பிற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.” என்றார்.
ஜனசக்தி காப்புறுதியின் தலைவராக அனிகா சேனாநாயக்கவின் நியமனம் மதிப்புமிக்க நபர்களான தேசமான்ய நிசங்க விஜேவர்தன, W.T.எல்லாவல, ஹுசைன் ஏசுஃபலி மற்றும் அனில் தித்தவெல PC. ஆகியோரின் சிறப்பான தலைமைத்துவ வழிநடத்தலை தொடர்கிறது. தலைமைத்துவத்தில் இந்த தொடர்ச்சியானது நிறுவனத்தின் ஸ்திரத்தன்மைக்கு உறுதியான அடித்தளத்தை வழங்கும் அதே வேளை அனிகாவின் புதிய தொலைநோக்கு அணுகுமுறையானது ஜனசக்தி காப்புறுதியின் எதிர்காலத்திற்கான ஆற்றல்மிக்க முன்னோக்கிய பயணத்தை உறுதி செய்கிறது.
பதில் தலைவராக பணியாற்றி வரும் பிரகாஷ் ஷாஃப்டர், தனது புதிய பதவிக்கு அனிகா காலடி எடுத்து வைக்கும் போது சுமூகமான மாற்றத்தையும் மூலோபாய மேற்பார்வையையும் உறுதி செய்து, நிர்வாக துணைத் தலைவராக தனது பதவியை தொடர்வார். தனது பரந்த அனுபவம் மற்றும் சிறந்த தலைமைத்துவத் திறன்களுடன் அனிகா ஜனசக்தி காப்புறுதியை அதன் அடுத்த அத்தியாயத்திற்கு கொண்டு செல்ல உள்ளதுடன் காப்புறுதித் துறையில் அதன் சிறந்த பாரம்பரியத்தை தொடர்வதை உறுதி செய்யவுள்ளார்.

You must be logged in to post a comment.