Local

அரசு வழிமாறி பயணித்தால் மக்கள் புரட்சி வெடிக்கும் – ஜே.வி.பி. எச்சரிக்கை

அரசு,  கடந்த காலத்தில் விட்ட தவறுகளை இனியும் செய்யுமானால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

”  நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தேர்தல்களை நடத்துவதில் பின்வாங்கும் நிலைமையே காணப்பட்டு வருகின்றது.

ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தாது நாட்டினை நாசமாக்கிய நிலையில் காலம் கடந்தேனும் தேர்தலை நடத்தினர். அதன் விளைவுகளை அரசாங்கம் நன்றாகவே அனுபவித்தது.

அதேபோல் இப்போதும் நாட்டில் ஆறு மாகாணசபைகள் கலைக்கப்பட்டுள்ளன. இன்னும் மூன்று மாகாணசபைகள் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் கலையவுள்ளன. எனவே, ஒரேநேரத்தில் தேர்தல் என்ற அறிவிப்பு காலத்தை இழுத்தடிக்கும் செயலாகும்.

பதவிகாலம் முடிவடைந்துள்ள மாகாணசபைகளுக்கு தேர்தல் நடத்தப்படவேண்டும். ஏனைய மாகாணசபைகளுக்கும் அதே திகதியில் தேர்தலை நடத்தலாம்.” என்றும் அவர் கூறினார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading