Local

மைத்திரியின் சகா ரணிலுடன் சங்கமம்!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கேகாலை மாவட்டத்தின் முன்னாள் எம்.பியான லலித் திஸாநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியுடன் இன்று (11) சங்கமித்துள்ளார்.

அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அரணாயக்க தொகுதி அமைப்பாளர் பதவியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிவைத்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக இருந்தபோது, லலித் திஸாநாயக்கவே பிரதி சுகாதார அமைச்சராக பதவி வகித்தார்.

மைத்திரியின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக விளங்கிய இவர், கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன்,  ஐ.தே.கவின் சார்பில் மேலும் ஐந்து தொகுதி அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

இதற்கான நிகழ்வு அலரிமாளிகையில் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர்.

புதிய தேர்தல் அமைப்பாளர்களின் விபரம் வருமாறு,

  1. ரூகாந்த குணதிலக – தம்பதெனிய

2.  திலின பண்டார தென்னகோன் – பகத்த தும்பர

3.   காவிந்த ஜயவர்தன – நீர்கொழும்பு

4. லலித் திஸாநாயக்க – அரணாயக்க

5.மஞ்சுல பண்டார – வாரியபொல

6.உமய விஜேநாயக்க – கிரயால

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading