LocalNorth

நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு எம்மைத் தூண்டுகின்றது அரசு! – சாடுகின்றார் சிவாஜிலிங்கம்

நாட்டைப் பிளவுபடுத்த இலங்கை அரசு எம்மைத் தூண்டுகின்றது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அத்தோடு, தமிழர்களின் விடயத்தில் அரசுக்கு இதற்கு மேலும் கால நீடிப்பு வழங்க முடியாது என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிங்களவர்களுக்கு மாத்திரமே சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. தமிழர்களுக்குத் துக்க தினமாகும்.

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கவில்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை.

இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் நிலங்கள் முழுதாக விடுவிக்கப்படவில்லை. இதன் காரணமாக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசை நிறுத்த வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading