Local

மதுஷ் உள்ளிட்ட குழுவுக்கு டுபாயில் மறியல் நீடிப்பு!

டுபாயில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு தலைவரான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மேலும் ஒரு மாதத்திற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நாளைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர் என்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகரான அமல் பெரேரா மற்றும் அவரின் மகன் நதீமால் பெரேரா சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணி சாப்திக வெல்லப்பிலி தெரிவித்தார்.

டுபாய் சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமல் பெரேரா மற்றும் நதீமால் பெரேரா ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்துவதற்காக அந்நாட்டு பொலிஸாரினால் கோரப்பட்டுள்ள அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை எனவும் தகவல் வெளியிட்டார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading