Local

ஜனாதிபதி – சபாநாயகர் மோதல் உக்கிரம்! மைத்திரியின் அழைப்பை நிராகரித்தார் கரு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சி குழுக்கூட்டத்தில் சபாநாயகர் கருஜயசூரிய பங்கேற்கமாட்டார் என அவரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு குறித்த சந்திப்பு இடம்பெறவிருந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு சபாநாயகருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த அழைப்பு சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்கப்போவதில்லை என்று ஜனாதிபதி அறிவித்திருந்தார். இதற்கு பதிலடிகொடுக்கும் நடவடிக்கையாகவே சபாநாயகரின் முடிவு அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading