LocalUp Country

7 ஆவது நாளாகவும் மலையகத்தில் தொடர்கிறது போராட்டம் ! கம்பனிகள் மௌனம்

ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைநிறுத்தப்போராட்டம் இன்று (11) ஏழாவது நாளாகவும் தொடர்ந்து  இடம்பெற்றது.

கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள் இன்று (11) மதியம் கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக அணிதிரத்து, உரிமைக்காக விண்ணதிரக் கோஷங்களை எழுப்பினர்.

” ஜனவரி மாதத்துக்கு முன்னர் தமக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும். முதலாளிமார் சம்மேளனமும் விட்டுக்கொடுப்புடன் செயற்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அதிரவைக்கும் வகையில் அமையும்” என்று  போராட்டக்காரர்கள் எச்சரித்தனர்.

அதேவேளை, மலையகத்தில் மேலும் பல பகுதிகளிலும் பணிபுறக்கணிப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

க.கிசாந்தன்

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading