LocalUncategorizedUp Country

5 ஆவது நாளாகவும் தொடர்கிறது உண்ணாவிரதப்போராட்டம் – தலைநகரில் எழுச்சிகொண்டது மலையகம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா  வழக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையக இளைஞர்களால், கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (22)  ஐந்தாவது நாளாகவும்  தொடர்கின்றது.

குறித்த போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் மலையகத்திலும் பல பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அத்துடன், களத்துக்கேவந்து பல இளைஞர்கள் நேசக்கரம் நீட்டிவரும் நிலையில், இன்றைய தினம் ரயில் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அதேவேளை, உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல்நிலை மோசமடைந்துவருகின்றது. எனினும், தீர்வு கிடைக்கும்வரை – தமது கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading