Local

புல்லட் புரூப் வாகனத்தை நிராகரித்தார் பேராயர்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்ட குண்டு துளைக்காத  வாகனத்தினை பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளார்.

ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பேராயரின் பாதுகாப்பு கருதி, தனக்கு வழங்கப்பட்டிருந்த இரண்டு குண்டு துளைக்காத வாகனங்களில் ஒன்றை, பேராயருக்கு வழங்குவதற்கு பிரதமர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதையே பேராயர் நிராகரித்துள்ளார்.  மெல்கம் ரஞ்சித் ஆண்டகையரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்படி கருத்தை வெளியிட்டார்.

” தேவனே என் பாதுகாவலன். எனவே, குண்டு துளைக்காக வாகம் தேவையில்லை. மக்களுக்கான பாதுகாப்பே எனக்கு தேவை.” என்றும் கூறினார்.

அத்துடன், தீவிரவாத தாக்குதல்களையடுத்து அரசுமீது கடும் விமர்சனங்களை பேராயர் முன்வைத்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading