Local

முல்லைத்தீவில் பிறந்திருந்தால் புலியாகியிருப்பேன் – ஞானசார தேரர்!

” நான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருப்பேன்.” என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்று (21) விஜயம்செய்த அமைச்சர் மனோ கணேசன்,  சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவரும் ஞானசார தேரரை சந்தித்து, சுகநலம் விசாரித்தார்.

சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் இருவரும் பேசிக்கொண்டனர் என தகவல்.

இந்நிலையில், ஞானசார தேரர்கூறிய விடயமொன்று குறித்து தனது முகநூலில் அமைச்சர் மனோ கீழ்வருமாறு பதிவிட்டுள்ளார்.

” நான் சிங்கள பெளத்தனாக பிறந்திட்டதால், எனது இனத்திற்காக போராடி இப்போது சிறையில் இருக்கிறேன். நான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால் ஒரு தமிழனாக போராடி ஒரு தமிழ் புலியாக இதே சிறையில் இருந்திருப்பேன் என்று ஞானசாரர் நேற்று என்னிடம் சொன்னார்.”

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading