Up Country

O/L பரீட்சைக்கு சென்ற மாணவி மாயம் ! தேடுதல் வேட்டையில் பொலிஸ்

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றச் சென்ற தனது மகள் , காணாமல்போயுள்ளார் என்று  அம்மாணவயின் தந்தை, சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் இன்று (10) முறைப்பாடு செய்துள்ளார்.

சியாம்பலாண்டுவைப் பகுதியின் தொம்பகாவெலையைச் சேர்ந்த காயத்திரி லக்பிய சேனாதீர என்ற 15 வயதுடைய மாணவியே, இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

பரீட்சை எழுதுவதற்காக இன்று காலை வழமைபோல் பெற்றோரை வணங்கி, ஆசி பெற்று வீட்டிலிருந்து வெளியேறிய குறித்த மாணவி – பரீட்சை முடிந்த பின்னரும் வீடு திரும்பவில்லை.

இதனால் பதற்றமடைந்த தந்தை,   சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர்.

பதுளை நிருபர்

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading