மோடி – மஹிந்த விரைவில் சந்திப்பு!
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியை இன்று (25) பிற்பகல் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு வாழ்த்தினார் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச.
எதிர்காலத்தில் இரண்டு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்குச் சாதகமான விடயங்கள் தொடர்பிலும் இந்தச் சுருக்க உரையாடலின்போது பேசப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
மஹிந்தவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச எம்.பியின் வாழ்த்துச் செய்தியையும் தான் பார்வையிட்டார் என்று இந்த உரையாடலின்போது மோடி குறிப்பிட்டார் எனவும் அறியவந்தது.
அதேவேளை, விரைவில் சந்திப்போம் என மஹிந்தவிடம் மோடி கூறினார் எனவும் தெரியவந்தது.

