FeaturesLead NewsLocalWorld

8000 பிரமுகர்கள் நேரில் வாழ்த்த பாரத தேசத்தின் பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்பு!

பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 8000 பிரமுகர்கள் நேரில் வாழ்த்த பாரத தேசமான இந்தியாவின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் நரேந்திர மோடி.

இந்திய ஜனாதிபதி மாளிகையில் உள்ள முற்றத்தில் இன்றிரவு 7 மணிக்குப் பதவியேற்பு விழா நடைபெற்றது.

நரேந்திர மோடிக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமராகப் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை பதவியேற்றது.

இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாரதீய ஜனதாக் கட்சி மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களைக் கைப்பற்றியது.

மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவரது தாயார் சோனியா காந்தியுடன் இன்றைய பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading