Local

2019 இற்கான ‘பட்ஜட்டை’ அரசு ஆயுதமாக்கும் – எச்சரிக்கிறார் மஹிந்த!

2019 ஆம் ஆண்டுக்கான  பட்ஜட்டை  வாக்குவேட்டை  நடத்துவதற்கான  ஆயுதமாக  அரசு பயன்படுத்தக்கூடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கொட்டியாக்கும்புர பகுதியில் இன்று நடைபெற்ற அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தேர்தல்கள் நெருங்குவதால் இம்முறை பட்ஜட் ஊடாக  அரசாங்கம் நிவாரணங்களை அள்ளி வழங்கலாம். பொருட்களின் விலைகளை குறைக்கலாம்.  வாக்குவேட்டை நடத்துவதற்கான  உபாயமே இது.

எனினும், தேர்தல் முடிவடைந்தபின்னர் விலைகள் அதிகரிக்கப்படும். அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வும் உரிய வகையில் வழங்கப்படமாட்டாது. ஆகவே, மக்கள் விழிப்பாகவே இருக்கவேண்டும்.

எந்தத்தேர்தல் நடைபெற்றாலும் நாம் ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும்.” என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading