Local

பாதாள கோஷ்டிக்கு சமாதி கட்டுக – அரசிடம் மஹிந்த வலியுறுத்து!

பாதாள கோஷ்டிக்கு முடிவு கட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் பாதாள கோஷ்டியின் அராஜக செயற்பாடுகள் மீண்டும தலைதூக்கியுள்ளது. அடிக்கடி துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன.

வத்தளை, ஹேகித்த பகுதியில் நேற்றுமுன்தினம்கூட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையிலேயே பாதாள கோஷ்டிக்கு தலைதூக்க இடமளிக்கப்படக்கூடாது என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

” பாதாள உலக குழுக்களை சில அரசியல்வாதிகளே பாதுகாக்கின்றனர். பொலிஸார் இந்த பாதாள உலக குழுக்கள் தொடர்பில் இதனை விடவும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

எனினும், சில பொலிஸ் அதிகாரிகள்கூட பாதாள உலக குழுவைச் சேர்ந்த சந்தேக நபர்களுக்கு உதவி வழங்கும் நிலை உருவாகியுள்ளது.

இலங்கைக்கு கேரலா கஞ்ஜா பாரியளவில் கடத்தப்படுகின்றது. இதன் பின்புலத்திலும் அரசியல் இருக்கின்றது.” என்றும் மஹிந்த கூறினார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading