Local

கப்பம் கொடுக்க மறுத்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை! – தெஹிவளையில் பரிதாபம்

காலி வீதி, தெஹிவளையில் ஹார்ட்வெயார் நடத்தும் வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கேட்டு அவர் கொடுக்க மறுத்தபின் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் இடம்பெறுள்ளது.

நேற்றுப் பிற்பகல் மூன்று மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த அஸீஸ் (வயது 60) களுபோவிலை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

அவர் கடையில் தனியே இருக்கும்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தெஹிவளை பொலிஸார், அந்தப்பகுதி சி.சி.ரி.வி. கமராக்களை ஆய்வுக்குட்படுத்தி விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதி முஸ்லிம் வர்த்தகர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading