LocalUp Country

கயிரால் கழுத்தை நெறுக்கி கணவனை படுகொலை செய்த மனைவி – பதுளையில் பயங்கரம்!

நபரொருவரின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, அவரின் மனைவியை ஹல்துமுல்லை பொலிசார் இன்று கைது செய்துள்ளதுடன், கொலைசெய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கயிறும் மீட்கப்பட்டுள்ளது.


பதுளை, மாவட்டத்திலுள்ள ஹல்துமுல்லை ஒக்வில் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி பெரியசாமி என்ற 72 வயது நிரம்பியவரே மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இம்மரணம் இயற்கை மரணமென்று ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்த போதிலும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தீடீர் மரண விசாரணை அதிகாரி கே. ஆர். ரட்ணவீர தெரிவித்ததையடுத்து,

மஜிஸ்ரேட் நீதிபதி விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு மரணம் கொலையென்று ஊர்ஜிதமாகியது.

இதைத் தொடர்ந்து, கொலையுண்டவரின் மனைவியான 69 வயது நிரம்பிய பெண், ஹல்துமுல்லை பொலிசாரினால் கைது செய்யப்பட்டதுடன், கொலைக்கும் பயன்படுத்தப்பட்ட கயிறும் மீட்கப்பட்டது.

கொலை செய்யப்படுவதற்கு முதல் தினம் இரவு கணவனுக்கும், மனைவிக்குமிடையே கடும் சண்டை ஏற்பட்டிருந்தமையும், அதைத்தொடர்ந்து, அவர் கயிரொன்றினால் கழுத்து நெறிக்கப்பட்டு கொலையுண்டமையும் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து  ஹல்துமுல்லை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.த சில்வா தலைமையிலான குழுவினர் இ தீவிர புலன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பதுளை நிருபர் – எம். செல்வராஜா

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading