FeaturesLead NewsLocal

முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாகப் பதவி துறப்பு! – இலங்கை அரசியலில் பரபரப்பு

சிங்கள இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை வகித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் சகலரும், அந்தப் பதவிகளை இன்று மாலை கூட்டாக இராஜிநாமா செய்துள்ளனர்.

அலரி மாளிகையில் இன்று மாலை கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் இந்தத் தகவலை அறிவித்தனர்.

இதற்கமைய நான்கு அமைச்சர்கள், நான்கு இராஜாங்க அமைச்சர்கள், ஒரு பிரதி அமைச்சர் என 9 முஸ்லிம் அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், கபீர் ஹாசீம், எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோரும், அலிசாஹீர் மௌலானா, பைசல் காசீம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஆகிய இராஜாங்க அமைச்சர்களும், பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பும் தமது பதவிகளைத் துறந்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading