Local

கசிப்பையும் ஒழித்தே தீருவேன் ! மைத்திரி அதிரடி அறிவிப்பு!!

நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன தெரிவித்தார்.

தெஹியத்தகண்டி – நுவரகல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு  கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

கசிப்பு பாவித்துவிட்டு, மனைவியைத் தாக்குகின்றனர். பொருட்களை நிலத்தில் வீசுகின்றனர். நோய்வாய்ப்படுகின்றனர். இதனால் பொருளாதாரம் வீழ்ச்சியடைகின்றது. பிச்சைக்காரர்களாக மாறுகின்றனர். இது தவறு என அவர்கள் அறிவார்கள். எனினும், தவறான விடயங்களை செய்து அழிந்து போகின்றனர்.

எனவேவ, மதுவற்ற கிராமங்களை உருவாக்கத் தேவையான திட்டங்களை தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பமாகும்.” என்றார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading