LocalNorth

இரத்தக் கண்ணீர் வடிக்கும் நாகபூசணி அம்மன் சிலை!

வவுனியா – சுந்தரபுரத்தில் அமைந்துள்ள புதூர் நாகபூசணி மற்றும் நாகதம்பிரான் ஆலயத்திலுள்ள அம்மன் சிலையின் ஒரு கண்ணில் இருந்து இரத்தக் கண்ணீர் வடிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைப் பார்வையிடுவதற்குப் பெரும் எண்ணிக்கையான மக்கள் அங்கு படையெடுத்து வருகின்றனர்.

நேற்றுக் காலை பூசகரான பெண் ஆலயத்துக்குள் சென்று பார்த்தபோது அம்மன் சிலையில் இருந்து சிவப்பு நிறத் திரவம் வடிவதை அவதானித்துள்ளார். உடனடியாக அதனைத் துடைத்த அவர் மீண்டும் அவ்வாறு கண்களில் இருந்து வருவதை அவதானித்தார். இதையடுத்து, ஆலயத் தொண்டர்களை அழைத்து காண்பித்துள்ளார்.

அவர்களும் அதனை துடைத்துப் பார்த்தபோது மீண்டும் கண்களில் இருந்து இரத்தம் சிந்துவதை அவதானித்த அவர்கள் விசேட பூஜைகளை நடத்தினர். இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியதையடுத்து நூற்றுக்கணக்கான அடியவர்களும் அம்மனை தரிசிக்க வந்த வண்ணமுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading