Local

புதிய பிரதம நீதியரசர் நியமிப்பு – நாளை கூடுகிறது அரசமைப்பு பேரவை!

புதிய பிரதம நீதியரசரை தெரிவுசெய்வதற்காக அரசியலமைப்பு பேரவை நாளை (12) கூடவுள்ளது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று தெரிவித்தார்.


நாடாளுமன்றத்தில் இன்று அரசியலமைப்பு பேரவை கூட்டுஎதிரணி எம்.பிக்களால் கேள்விகள் எழுப்பட்டவேளையிலேயே, சபாநாயகரால் மேற்படி தகவல் வெளியிடப்பட்டது.


“ அரசியலமைப்பு பேரவைக்கு மொத்தமாக 10 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவேண்டும். அதில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மூவரும் இடம்பெறவேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். சிவில் உறுப்பினர்கள் தேர்வுக்கு தற்போது சபை அங்கீகாரமளித்தால் இன்று மாலைக்குள் அந்த நியமனமும் இடம்பெற்றுவிடும்.

இதன்படி புதிய பிரதம நீதியரசரை தேர்ந்தெடுப்பதற்காக அரசியலமைப்பு பேரவை நாளை கூடும்” என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading