Local

சமூகநலப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க துரித நடவடிக்கை! – புதிய அலை கலை வட்டம் அறிவிப்பு

தலைநகரில் கடந்த 39 ஆண்டுகளாக இயங்கிவரும் புதிய அலை கலை வட்டம் தனது சமூக நலப்பணிகளை நல உதயம் என்ற அமைப்பின் மூலமாக கடந்த 1990 ஆண்டு முதல் முன்னெடுத்து வந்தது. இதனூடாக கடந்த காலங்களில் இலவசக் கண்ணாடி வழங்கல், சிரமதான நிகழ்வுகள் மற்றும் அறநெறிக் கல்வி போன்ற நிகழ்வுகளை நடத்தி வந்தது. எனினும், கடந்த சில ஆண்டுகளாகத் தேக்கம் கண்டிருந்த இப்பணிகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என மேற்படி அமைப்பின் தலைவர் ராதாமேத்தா தெரிவிக்கின்றார்.

சமூக நலச் செயற்பாட்டில் ஆர்வமுள்ள புதிய அங்கத்தவர்களை இந்த அமைப்பினில் இணைத்துக்கொள்ளும் செயற்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனுடாகப் பல்வேறு சமூக நலப்பணிகளைத் தொடர்ச்சியாக வழிநடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, ஆர்வமுள்ள ஆண், பெண் இருபாலாரும் இணைந்துகொள்ள விரும்பினால் ‘நல உதயம்’, இல.64/23 சங்கமித்தை மாவத்தை, கொழும்பு – 11 என்ற முகவரியில் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading