Local

வடக்கு, கிழக்கு இணைந்தால் ‘இரத்த ஆறு’ கட்டாயம் ஓடும்! – தெரிவுக்குழு முன்னிலையிலும் உறுதிப்படுத்தினார் ஹிஸ்புல்லா

“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டால் கட்டாயம் இரத்த ஆறு ஓடும் என்று நான் கூறியது உண்மைதான்.”

– இவ்வாறு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்தார் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு, கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்லிம்கள் ஒருபோதும் விரும்பவில்லை. இதை எதிர்த்து முஸ்லிம் மக்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என அன்று கூறியிருந்தேன். அவர்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும்.

அதனால்தான் வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால் கட்டாயம் இரத்த ஆறு ஓடும் என்று கூறியிருந்தேன். நான் அன்று கூறியது உண்மை” – என்றார்.

இதன்போது இடைமறித்த தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவர், ‘பொறுப்புள்ள அரசியல் தலைவர் இப்படிக் கூறலாமா?’ என்று வினவினார். இதன்போது ஹிஸ்புல்லா மௌனமாக இருந்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading