Local

இலங்கை விவகாரத்தை மீண்டும் கையிலெடுக்கிறது நோர்வே! இன்று வருகிறார் அந்நாட்டு அமைச்சர்!!

நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் இரண்டு நாட்கள் பயணமாக இன்று இலங்கை வரவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது அவர்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நிதியமைச்சர் மங்கள சமரவீர, உள்ளிட்டோரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் சந்திப்பு நடத்தவுள்ளார்.

காணாமல் போனோருக்கான பணியகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக மற்றும் வணிகப் பிரதிநிதிகளையும் நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்தித்துப் பேசவுள்ளார்.

அத்துடன் வடக்கிற்கும் இவர் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

போர்காலத்தில் இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதில் நோர்வே முக்கிய வகிபாகத்தை வகித்திருந்தது.

தீர்வுத்திட்டப்பேச்சு, சமாதானப் பேச்சு எல்லாம் அந்நாட்டின் கண்காணிப்பு மற்றும் தலைமையின்கீழேயே முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading