Local

இலங்கையில் உயிரிழந்த மக்களுக்காக இருண்டது ஈபெல் கோபுரம்

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபெல் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு, இலங்கையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு நாளான நேற்று இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 200இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்த மக்களுக்கு உலகெங்கும் இருந்து அனுதாபங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஈபெல் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஈபெல் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. இதுதொடர்பாக ஈபெல் கோபுரத்தின் கீச்சகப் பக்கத்திலும் பதிவு ஒன்று இடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading