Sports

ஐ.பி.எல். போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்ப தடை!

 ஐ.பி.எல். போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்புவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் ( 23) இரவு 8 மணிக்கு சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. முதல்போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ், ரோயல் சேலேஞ்சர்ஸ் ஆகிய அணிகள் களம் காண்கின்றன.
இப்போட்டிக்கான டிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானத்தை காஷ்மீர், புல்வாமா   தாக்குதலில்  மரணம் அடைந்த இராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ்  நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
புல்வாமா தாக்குதலையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கிடையிலான உறவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்புவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
”  அரசியலையும் கிரிக்கெட்டையும் பாகிஸ்தான் தனித்தனியாக வைத்துள்ளது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி,  இராணுவ தொப்பிகளை அணிந்து விளையாடுகின்றது. அதற்கு எதிராக இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஐ.பி.எல். போட்டியில்கூட அரசியல் திணிக்கப்பட்டுள்ளது. ஐ.பி. எல். போட்டிகள் பாகிஸ்தானில் ஒளிபரப்படவில்லையென்றால் அது இந்தியாவுக்கு பெரும் இழப்பாக அமையும்” என்று
பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading