Sports

நியூஸிலாந்தை வீழ்த்தி வென்றது பாகிஸ்தான்!

நடைபெற்று வருகின்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 33ஆவது போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி தொடரில் அரையிறுதி வாய்ப்பைத் தக்க வைத்துள்ளது.

உலகக் கிண்ணத் தொடரின் 33ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று மாலை போட்டி நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

238 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 49.1 ஓவரில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 241 ஓட்டங்களை பெற்று, நியூஸிலாந்து அணி நிர்ணயித்த வெற்றி இலக்கை கடந்தது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி எதிர்கொண்ட 7 போட்டிகளில் 3 இல் வெற்றியைச் சந்தித்து 7 புள்ளிகளுடன் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கான வாய்ப்பைத் தக்க வைத்துள்ளதுடன் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு நுழைவது பெரும்பாலும் உறுதியாகிவிடும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading