Lead NewsLocal

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்!

நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

தற்போது கொழும்பு அரசியலில் பலத்த இழுபறிகள் காணப்படும் நிலையில் நாடாளுமன்றம் கூடுவது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
.
நாடாளுமன்ற அமர்வையொட்டி ஆளுங்கட்சி நாடாளுமன்றக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிரதமர் தலைமை அமைச்சர் விக்கிரமசிங்க தலமையில் நடைபெற்றது.

அதேவேளை, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுக் கூட்டங்கள் இன்று நடைபெறவுள்ளன. இதன்போது சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading