Local

நீள்கிறது அரசியல் குழப்பம்! நள்ளிரவு கலைகிறது நாடாளுமன்றம்!!

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுநேரத்துக்கு முன்னர் கையொப்பமிட்டுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.


அரசமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், நான்கரை வருடங்கள் செல்வதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கமுடியாது என்றும், மேற்குறிப்பிட்ட காலப்பகுதி முடிவடைந்த பின்னர் நாடாளுமன்றத்தின் அனுமதியுடனேயே அதை செய்யவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்தில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு தீர்மானித்துள்ளமை குறித்து பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றமானது எதிர்வரும் 14 ஆம் திகதி கூடவிருந்தது. அன்றைய தினம் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கே பிரதமர் பதவி வழங்கப்படும் என சபாநாயகர் திட்டவட்டமாக அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading