World

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ! சுனாமி பீதியால் மக்கள் அச்சம்!!

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.

இந்தோனேசியாவில் உள்ள மென்ட்டாவாய் தீவுக்கு 117 கி.மீ தென்கிழக்கே கடல் படுகைக்கு அடியில் 17 கி.மீ ஆழத்தில் இன்று மாலை 3 மணி அளவில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவிலும், அதன் பின்னர் சுமார் 25 நிமிடங்களுக்கு பிறகு ஏற்பட்ட நிலநடுக்கம் 6.0 ரிக்டராகவும் பதிவானது.
மென்ட்டாவாய் மாவட்டத்திற்குட்பட்ட கேபுலவான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகமாக உணரப்பட்ட இந்த நிலநடுக்கங்களால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் உண்டான சேதம் மற்றும் இழப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading