LocalUp Country

சம்பள உரிமைக்காக பொகவந்தலாவையில் போராட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை  நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவை நகரில் இன்று (03) கறுப்புகொடி போராட்டம் நடத்தப்பட்டது.

1000 ரூபாவுக்கான இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்துக்கு, மலையக இளைஞர்களும் பேராதரவை வழங்கியிருந்தனர். பொகவந்தலாவைப் பகுதியிலுள்ள தோட்டத்தொழிலாளர்களும் அணிதிரண்டுவந்து பங்கேற்றிருந்தனர்.

” நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெழும்பாகத் திகழும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்க மறுப்பது ஏன்?, அரசே தோட்டத் தொழிலாளர்களுக்கு பராமுகம் காட்டாதே! ஆயிரம் ரூபாவை வழங்க நடவடிக்கை எடு! ”

என்றெல்லாம் போராட்டக்காரர்களால் கோஷங்கள் எழுப்பட்டன.

 

க.கிசாந்தன்

(பத்தன நிருபர்)

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading